ஆர்யா-சாயிஷா திருமணம் ஓவர்: எங்கிருந்தாலும் வாழ்க என்ற காதலிகள்

ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் இனிதே நடந்து முடிந்தது. நடிகர்-நடிகைகள் பலரும் மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற மெகந்தி நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் சாயிஷா போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, திருமணத்தில் ஆர்யாவின் எக்ஸ் கேர்ள் பிரண்டஸ் சிலரும் கலந்து கொண்டு ஆனந்தா கண்ணீர் வடித்து, ஆர்யா-சாயிஷா தம்பதியை எங்கிருந்தாலும் வாழ்கனு வாழ்த்தினார்களாம். அவங்க பிரண்ட்ஷிப் இனிமேல கட்டுனு சாயிஷா கிட்ட ஆர்யா சத்தியம் செஞ்சு கொடுத்து இருக்காராம்.

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாகவும், பிளேபாயாகவும் வலம் வந்த‌வர் நடிகர் ஆர்யா. இதற்கு முன் நயன்தாரா மற்றும் பல நடிகைகள் கூட கிசுகிசுக்கப்பட்டார். அதேபோல், எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிகல‌ சில பெண்களை தேர்ந்தெடுத்தார். ஆனால், இறுதி நிகழ்ச்சியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என கூறி எஸ்கேப் ஆனார்.

வனமகன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சயிஷா, தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். கார்த்தியின் ஜோடியாக அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. விஜய் சேதுபதி ஜோடியா ஜுங்கா படத்துலயும் இவர் நடிச்சார்.

ஒரு பேட்டியில ஆர்யா பற்றி சாயிஷா கூறும்போது, “ஆர்யா ஒரு ப்ளே பாய், வாலுப்பையன் என பலர் கூறி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கஜினிகாந்தில் அவருடன் நடித்தபோது எனக்கு அப்படி தோன்றவில்லை.

படப்பிடிப்பின் போது ஜாலியாக இருப்பார், அனைவரையும் கிண்டல் செய்வார். ஆனால், அவருடைய மறுப்பக்கத்தைப் பார்த்தால் அவர் மிகவும் சீரியசான மனிதர். மிகவும் குடும்பப்பாங்கானவர். விளையாட்டு, பிட்னெஸ், குடும்பம் என அர்ப்பணிப்புடன் இருப்பார். அன்பானவரும் கூட. அவருடன் நடிப்பது வசதியாக இருக்கும்”னு சொன்னார்.