அனுஷ்கா: திருமணமா? திரைப்படமா?

37 வயதானாலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே திகழ்ந்த அனுஷ்கா, சமீபத்துல தான் ரொம்பவே குண்டானதோட மட்டுமில்லாம, பல பேரோட மனங்களையும் கனக்க வெச்சார். இதனால, அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மட்டுமின்றி, இப்போ நடக்கும், அப்போ நடக்கும்னு சொல்லப்பட்ட திருமணமும் தள்ளிப்போனது.

இதனால் ஒரு முடிவுக்கு வந்த அனுஷ்கா, ஒரு டயட்டிஷன் மற்றும் எடை குறைப்பு எக்ஸ்பெர்ட்டோட சேர்ந்து கடும் முயற்சி மற்றும் பயிற்சிக்கு பிறகு, உடல் எடையை ரொம்பவே குறைச்சி, இப்போ ஸ்லிம்மாகவும், செக்சியாவாகவும் காட்சியளிக்கிறார்.

விரைவில் மாதவன் கூட இணைஞ்சி சைலன்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் அனுஷ்கா, தன்னோட திருமணத்துக்கும் வீட்டுல ஒகே சொன்னதா ஒரு தகவல் உலா வருது. ஆனால் மணமகன் அனுஷ்காவின் மனம் கவர்ந்த திரைப்பட ஹீரோவா அல்லது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையா என்பது மட்டும் இன்னும் கேள்விக்குறியாவே இருக்குதாம்.

எது எப்படி இருந்தாலும், அனுஷ்காவோட திருமணம் விரைவில் நடக்கவிருப்பது உறுதி, கல்யாணத்துக்கு பின்பும் அவர் தொடர்ந்து சினிமாவுல நடிப்பாருன்னு அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுது.

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அனுஷ்கா, தனது உயரம், எடை மற்றும் அழகால் பல ரசிகர்களை குவித்தார். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். தென் இந்திய நடிகைகளில் அதிகமான சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை இவர்.

கடைசியாக பாகமதி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் ஸ்லிம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அனுஷ்காவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். அதில் ஒரு புகைப்படத்தில் ஊட்டச்சத்து நிபுணர் லூக் கவுடின்ஹோ உடன் இருக்கிறார். தனது புதிய லுக்கில் அனுஷ்கா மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார்.

நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு இப்புகைப்படங்களை க்ளிக்கியுள்ளார். இதுகுறித்து மேலும் விசாரிக்கையில் டையடீஷியன் லூக் கொட்டினோ, தனது உணவியல் மற்றும் லஃப்ஸ்டைல் சம்பந்தமாக வெளிவரும் அடுத்த புத்தகத்துக்காக இந்தப் போட்டோஷூட் நடத்தியதாக‌ தெரிவிக்கப்படுகிறது.

இதைப்பற்றி அவர் டிவிட்டரில், “We have something coming up real soon ….our vision is to change the health of the country , encourage investment in prevention and use lifestyle as the new religion and the magic drug ….we aim to put the word “care” back into “ “ healthcare ” என்று தெரிவித்து உள்ளார்.