*மாஸ்டரை தொடர்ந்து இன்னொரு லீக்.. ஷாக்கான படக்குழு!*

*லீக்கான டீஸர்.. ஷாக்கான தேசிய தலைவர் படக்குழு!*
*லீக்கான டீஸர்.. ஷாக்கான படக்குழு!*
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
 ‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கான டீசரை பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்ட மிட்டிருந்தது. அதற்குள்  படத்தின் டீஸர் சோசியல் மீடியாவில் நேற்று லீக் ஆனது. உடனடியாக காலத்தில் இறங்கிய படக்குழு, இதற்கு காரணம் படத்தின் எடிட்டர் தான் கண்டுபிடித்து அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான்  மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் லீக் ஆகி சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. 
மாஸ்டர் பட விவகாரத்திலும், படத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சோனி டிஜிட்டல்  நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டது பின்னர் தெரிய வந்தது.