அன்புமணி மனைவி சவும்யா: லோக் சபாவா? ராஜ்ய சபாவா?

அதிமுக கூட்டணியில் முதலில் சேர்ந்து 8 சீட்டுகளை (7 மக்களவை, 1 மாநிலங்களவை) தட்டி சென்ற பாமக, தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் பிசியா இருக்குது. இதுல லேட்டஸ்ட் பரபரப்பு என்னன்னா, அன்புமணியின் மனைவி சவும்யாவும் ஒரு வேட்பாளரா இருப்பாருன்றது தான்.

அன்புமணி ராஜ்ய சபாவுக்கு போட்டியிடும் பட்சத்துல அவர் தொகுதியான தர்மபுரியில் சவும்யா லோக் சபா தேர்தலில் நிறுத்தப்படுவாருன்னும், ஒரு வேளை அன்புமணி தர்மபுரியிலேயே மறுபடி நின்றால், சவும்யா மாநிலங்களவைக்கு நிற்பாருன்னும் பேசிக்கிறாங்க.

சவுமியா அன்புமணி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் ‘பசுமைத் தாயகம்’ என்ற அமைப்பின் மூலம் எல்லா பகுதியிலும் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தந்தை காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். சகோதரர் விஷ்ணுபிரசாத் தற்போது தமிழக காங்கிரசின் செயல் தலைவராக உள்ளார்.

தருமபுரியை தொகுதியை பொறுத்தவரை ஆஹா ஓஹோன்னு இல்லைன்னாலும் சொல்லிக் கொள்ளும்படியான அதாவது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தொகுதியை தக்க வைத்து கொண்டிருப்பவர் அன்புமணி. அதனால அங்கே அன்புமணி அல்லது சவுமியா போட்டியிடுவது உறுதின்னு சொல்றாங்க.

அதிமுக பாஜக கூட்டணியில் பாமவுக்கு தர்மபுரி, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், அரக்கோணம், விழுப்புரம் மற்றும் கடலூர் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை, அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி பேசுகையில், “பாமக சார்பில் முதல்வர், துணை முதல்வரை குழுவாக சந்தித்தோம். இதன் நோக்கம், ஒன்று எனது தொகுதி பற்றியது.

மற்றொன்று, பாமக கொடுத்த 10 அம்ச கோரிக்கைகள் பற்றியது. உடனடியாக அவற்றை நிறைவேற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவற்றினை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். விரைவில் இது தொடர்பாக அறிக்கை வரும் என நம்புகிறோம்”, என்றார்.