ஏமி ஜாக்சனின் திருமணம் எங்கே தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சன், அடுத்த ஆண்டு கைக்குழந்தையோடு தனது காதலன் ஜார்ஜ் பனயிட்டோவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது கல்யாணம் கிரீசில் உள்ள பிரபல மிக்கனாஸ் ஐலேண்டில் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு உலகெங்கிலுமிருந்து முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமி ஜாக்சன் தெரிவித்திருந்தார்.

என்ன தான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் இங்கிலாந்தில் சகஜமாக இருந்தாலும், தன் காதலன் 2020ல் நடக்கவிருக்கும் திருமணத்திற்குள் மனம் மாறிவிடக்கூடாது என்று தான் ஏமி இப்படி ஒரு முடிவெடுத்ததாக சில தகவல்கள் கூறின.

ஏமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் ப்ரொபோஸ் செய்ததாக ஏமி தெரிவித்தார்.

ஜார்ஜ் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாம். அவர்களின் குடும்ப சொத்து பல ஆயிரம் கோடிகளை தாண்டுமாம். ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு ரூ 3 ஆயிரத்து 600 கோடி ஆகும்.

ஜார்ஜ் எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எமி படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார்.

இதுகுறித்து கேட்டபோது, “அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை” என தெரிவித்திருந்தார்.