's first night & honeymoon plans

எமி ஜாக்சனின் ஃபர்ஸ்ட் நைட் பிளான்

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் ஜார்ஜ் பானியிட்டோவை திருமணம் செய்யவுள்ள எமி ஜாக்சன் தன் கல்யாணத்துக்கு சிறப்பான மற்றும் தரமான பிளான்களை போட்டுட்டு வர்றாரு.

கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பமாம். எமி தனது காதலரான ஜார்ஜ்வுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு அவங்களை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் நைட்டும் அங்கேயே நடக்குமாம். அதுக்கு பிறகு தேனிலவுக்காக கிட்ட தட்ட பாதி உலகத்தையே சுத்தி வர்ற இந்த் காதல் ஜோடி முடிவு பண்ணி இருக்குதாம்.

ஜார்ஜின் தந்தை ஆன்டிரியாஸ் தி எபிலிட்டி குரூப் என்கிற நிறுவனத்தின் உரிமையாளர். அவரின் சொத்து மதிப்பு மட்டும் 400 மில்லியன் பவுண்டுகள். இந்திய ரூபாய் மதிப்பில் இது 3500 கோடி ரூபாய்க்கும் மேல். உலகம் முழுக்க பல ஹோட்டல்களுக்கும், கம்பெனிகளுக்கும் சொந்தக்காரராம்.

புதுவருடம் பிறந்த அன்னிக்கு, எமி ஜாக்சன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
பெரிய அளவில் வைர மோதிரம் கையில் இருக்க, எமி ஜாக்சன் தன் காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டார். ஜாம்பியா நாட்டில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

எமிஜாக்சன் தமிழில் மதராசபட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

விஜய், தனுஷ், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் மட்டுமே சில்வர் ஸ்கிரீனில் நடித்து வரும் ஏமிக்கு தற்போதைக்கு அடுத்த படம் எதுவும் இல்லை. எவ்வித கமிட்மண்டும் இப்போதைக்கு இல்லாத காரணத்தால், அவரது சொந்த நாடான லண்டனில் தனது காதலருடன் ரிலாக்ஸ் செய்து வருகிறார்.