கர்ப்ப காலத்திலும் அடிக்கடி அதை செய்யும் எமி ஜாக்சன்

கர்ப்பமான பின்பு பெரும்பாலான பெண்கள் அதை பற்றிய நினைவுகளிலேயெ மூழ்கி விடுவார்கள். ஆனால், எமி ஜாக்சனோ கொஞ்சமும் மாறாமல் அதே பழைய உற்சாகத்துடன் அடிக்கடி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது 22 வார கர்ப்பிணியாக இருக்கிறார் எமி. வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி.

தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல், தனது கர்ப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் எமி, “நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன்,” என கூறியிருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சன், அடுத்த ஆண்டு கைக்குழந்தையோடு தனது காதலன் ஜார்ஜ் பனயிட்டோவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது கல்யாணம் கிரீசில் உள்ள பிரபல மிக்கனாஸ் ஐலேண்டில் நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு உலகெங்கிலுமிருந்து முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக எமி ஜாக்சன் தெரிவித்திருந்தார்.

எமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் ப்ரொபோஸ் செய்ததாக எமி தெரிவித்தார்.

ஜார்ஜ் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாம். அவர்களின் குடும்ப சொத்து பல ஆயிரம் கோடிகளை தாண்டுமாம். ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு ரூ 3 ஆயிரத்து 600 கோடி ஆகும்.