கல்யாணத்துக்கு முன் கர்ப்பமான ஏமி: இது தான் காரணமா?

நடிகை ஏமி ஜாக்சனும், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இந்த காதல் ஜோடி 2020ல் தான் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். இதற்கிடையே, திருமணத்திற்கு முன்பே ஏமி ஜாக்சன் கர்ப்பமாகி இருக்கிறார். அதை அவரே அறிவித்தும் இருக்கிறார்.

ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை காதலர் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இருவருக்கும் உலகெங்கிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

என்ன தான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் இங்கிலாந்தில் சகஜமாக இருந்தாலும், தன் காதலன் 2020ல் நடக்கவிருக்கும் திருமணத்திற்குள் மனம் மாறிவிடக்கூடாது என்று தான் ஏமி இப்படி ஒரு முடிவெடுத்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.

ஏமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் ப்ரொபோஸ் செய்ததாக ஏமி தெரிவித்தார். ஜார்ஜ் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாம். அவர்களின் குடும்ப சொத்து பல ஆயிரம் கோடிகளை தாண்டுமாம்.

ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு ரூ 3 ஆயிரத்து 600 கோடி ஆகும். ஜார்ஜ் எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எமி படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது, “அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை” என தெரிவித்திருந்தார்.

கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பமாம். எமி தனது காதலரான ஜார்ஜுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு அவங்களை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.