அம்மா உணவகம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா

மனமே மனமே கலங்காதே மனமே..என்ற தத்துவ பாடலுக்கு இயக்குனர் சுப்ரமணியம் சிவாவும், நம்பாதே நம்பாதே பெண்களை நம்பாதே…என்ற துள்ளல் இசை பாடலுக்கு இயக்குனர் ஷரவண சக்தியும் நடித்துள்ளனர். இதுவே படத்தின் பக்கபலமும் ஒன்று.
கொரோனா பேரிடர் காலத்தில் கடை நிலை மருத்துவ ஊழியர்கள், திரைப்பட தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் வாட்ச்மேன் வேலை பார்த்து குடும்பத்தை நகர்த்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா இப்படம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை பக்கத்தை அப்படியே சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்றும் இது வணிகரீதியாகவும் வெற்றி பெரும் என்று வாழ்த்தினார். இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், வ.கௌதமன், சுப்ரமணியம் சிவா, யுரேகா, ஷரவண சக்தி மற்றும் தொழிலதிபர் சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இப்படம் விரைவில் வெளிவருகிறது.
– வெங்கட் பி.ஆர்.ஓ.