Amit Shah’s hit list: Fake activists in fear

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயெ அதிரடிகளை அரங்கேற்ற தொடங்கி விட்டார் அமித் ஷா. மூத்த உள்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை அழைத்த அவர், போராளிகள், சமூக ஆர்வலர்கள் என்னும் போர்வையில் நாட்டில் பிரச்சினைகளைத் தூண்டுபவர்கள் யார், மக்களை திசை திருப்பவர்கள் யார் என டீடெயில் லிஸ்ட் கேட்டுள்ளாராம்.

அதோடு மட்டுமில்லாமல், மும்முரமாக செயல்படும், பத்து பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை வெளியிட்டு, அவற்றை அழிப்பதற்கான வியூகத்தையும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளிடம் பேசிய அமித் ஷா, “ஜம்மு-காஷ்மீர் உட்பட நாட்டின் எந்த பகுதியிலும், பயங்கரவாதம் இருக்கக் கூடாது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்”, என உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்கள் எல்லாம் தமிழகத்தில் செயல்படும் போலி போராளிகள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளதாம். இனி அடக்கி வாசிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

அமித் ஷா பாதுகாப்புப் படைகளுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். எந்தவொரு விமர்சனத்திற்கும் அஞ்சாமல் பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார் என தகவலறிந்த‌ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. மாறாக சமூக காரணங்களையும் ஆராய்ந்து அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் பலரும் மீண்டும் தீவிரவாதத்துடன் இணைந்திடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளாராம்.

இதற்கிடையே கட்சிக்குள்ளும் கட்டுப்பாடுகளை கொண்டுவர அமித் ஷா அஞ்சவில்லை. மத்திய விலங்குகள் நலத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை அவர் எச்சரித்துள்ளார். பிகார் முதல்வர் நிதீஷ் குமார், லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்படத்தை அமைச்சர் கிரிராஜ்சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதே நவராத்திரி திருவிழாவில் ஒரு உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நாம் ஏன் நம் நம்பிக்கையை மறைத்துக் கொள்ள வேண்டும். ஏன் இந்தப் பாசாங்கு? என்று டிவீட் செய்திருந்தார்.

இந்த பதிவு சர்ச்சையானதை அடுத்து பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கிரிராஜ் சிங்கை எச்சரித்துள்ளார். இனிமேல் இதுபோன்ற பதிவுகளை வெளியிட கூடாது என்று வார்னிங் கொடுத்துள்ளார்.