தூக்கி காட்டிய அமலா பால், தூக்கம் தொலைத்த ரசிகர்கள்

வித்தியாசமான மற்றும் வில்லங்கமான படங்களை தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை பரவசப்படுத்துவது அமலா பாலின் வழக்கம். சில பேர் ஆபாச கமென்டுகள் போட்டாலும், மைனா அதையெல்லாம் மைன்ட் செய்வதில்லை.

தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் அமலா பால். சூரிய நமஸ்காரம் செய்வது போல் கைகளையும் கால்களையும் தூக்கி போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ‘இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.

ஒற்றைக் கால் ஆசனம், கால்களையும் முதுகையும் உயரே தூக்கி நிறுத்தியபடியான ஆசனம் என வெவ்வேறு போஸ்களை தந்திருக்கும் அமலாபாலின் பயிற்சிகளை கண்ட ரசிகர்கள், ‘உங்கள் உடல் ரப்பர் போல் வளைகிறதே’ என ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார்.

வீர சேகரன் படத்தில் அறிமுகம் ஆனாலும், சிந்து சமவெளி படத்தில் கவர்ச்சி காட்டி மோசமான பெயருடன் அனைவரும் அறியப்பட்ட நடிகையானார். இருப்பினும் அடுத்த வந்த மைனா படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. சிறந்த நடிகை விருதை வென்றார்.

அடுத்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என பல படங்களில் நடித்த அமலா பால் தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாகி ஜொலித்தார். அண்மையில் வெளிவந்த ராட்சசன் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க வேண்டுமானல் உடல் ஃபிட்னஸ் மிகவும் அவசியம். அதுவும் நாயகிகளுக்கு சொல்லவே வேண்டாம். இல்லையென்றால், சீரியல் நடிகையாகவோ அம்மா நடிகையாகவோ ஆக்கி விடுவார்கள்.

பாலிவுட் நடிகைகள் உடற்பயிற்சி மற்றும் யோகாக்களை தங்களது உடல் ஃபிட்னஸ்க்காக எப்போதிருந்தோ பின்பற்றி வருகின்றனர்.
கோலிவுட் நடிகைகளும் தற்போது அந்த ரூட்டை பின் தொடர்வது ஆரோக்கியமான விஷயம் தான்.