காதலில் விழுந்தாரா அமலா பால்? கடற்கரையிலிருது வரும் சிக்னல்

இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செஞ்ச அமலா பால், அதே வேகத்துல கருத்து வேறுபாடு காரணாமா அவர் கிட்ட இருந்து பிரிஞ்சி விவகாரத்தும் வாங்கிட்டார். அதுக்கப்புறமா, படங்கள்ல நடிக்கிறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சவர், ஹீரோயின் ச‌ப்ஜெக்ட் கொண்ட திரைப்படங்கள்ல தற்போது நடிச்சிட்டு வர்றார்.

இதுக்கிடையில, சில நடிகர்களோட அவர் கிசுகிசுக்கப்பட்டாலும், அவர் அவங்களோட நட்பு முறையில மட்டும் தான் பழகினார் என்று அமலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொன்னாங்க. ஆனால், கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக அமலா பால் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவு செய்துள்ளார்.

கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக சினேகம் என்று மலையாளத்தில் எழுதி அந்த படத்தை வெளி யிட்டிருக்கிறார். அமலா பால் யாருக்கு காதல் சிக்னல் காட்டுகிறார் என நெட்டிஸன்கள் வலைபோட்டு காதலனை தேடிக்கெண்டிருக்கின்றனர்.

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்தபோது அமலாவுக்கும், விஷ்ணுவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த தகவலை உறுதிப்படுத்துற மாதிரி விஷ்ணு விஷாலின் விவாகரத்து செய்தியும் வெளியானது. ஆனால் அமலா பாலுடன் காதல் என்னும் தகவலை விஷ்ணு விஷால் உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். அமலா பாலோ காதல் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் நடிப்பிலேயே கவனமாக இருந்தார்.

இதற்கிடையே, இந்தியிலயும் தன்னோட வெற்றிக்கொடி நாட்ட திட்டம் போட்டுள்ள அமலா, இதற்கான முயற்சிகள்லயும் ஈடுபட்டு உள்ளாராம். இதனால அடிக்கடி மும்பைக்கு மைனா பறப்பதாகவும் சொல்றாங்க.

மேயாத மான் புகழ் ர‌த்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்து வரும் படம் ஆடை. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் ஆடையில்லாமல் டிஷு பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. படத்தை பார்க்கும்போது அந்த காட்சி ஏன் அப்படி வைக்கப்பட்டுள்ளது என்பது புரியுமாம்.

இதுக்கிடையில, அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு பெண் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் ‘திரில்லர்’ படம் இது. ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளைச் சுற்றி நடக்கும் கதை இது.