Alagiri meets Rajini, 'Operation Stalin' starts

ரஜினியை சந்தித்த அழகிரி, ஆரம்பமாகும் ஆபரேஷன் ஸ்டாலின்

தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை இழுத்த திமுக மேல ரொம்பவே கடுப்பில் இருக்கும் ரஜினி, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க தான் கட்சி ஆரம்பிக்கிற வரைக்கும் காத்திருக்க வேண்டாம்னு நினைக்கிறாராம்.

அதோட முதல் படியா, விஜயகாந்த்தை போன வாரம் சந்திச்சு திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பீதி கிளப்பிய‌ சூப்பர் ஸ்டார் (ரஜினி சந்திச்ச கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஸ்டாலின் போய் கேப்டனை சந்திச்சார்), நேற்று மு க அழகிரியை சந்தித்து இருக்கார். நேற்று ரஜினியில் திருமணா நாள்.

இதற்கு வாழ்த்து தெரிவிக்க அழகிரி அவரை சந்திச்சதாக கூறப்பட்டாலும், அரசியலும் ஆபரேஷன் ஸ்டாலினும் விரிவாக அலசப்பட்டதாம். சென்னையில் செய்தியாளர்களையும் அழகிரி சந்திச்சார். அப்போது அவரிடம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு அழகிரி, ‘கடந்த தேர்தல்களைப் போல இருக்கும்’ என்று மட்டும் சொன்னார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வரவில்லை. எனவே திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கும் என்பதாக அவரது கருத்தை ஊடகங்கள் எடுத்துக் கொண்டன.

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் கூறிய அழகிரி, வேற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. ஆனால், அவரோட கருத்து திமுக.வினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் அழகிரியை அவரோட பிறந்தநாள் அன்னிக்கு தொடர்பு கொண்ட ரஜினி அவரை சில குறிப்பிட்ட வார்த்தைகளால் வாழ்த்தி அன்பு மழையில திக்கு முக்காட வெச்சிட்டார்.

“நீங்கள் ஒரு நேர்மையான, நல்ல மனிதர். அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் என்பது யாருக்குமே கிடையாது. எதிர்காலத்தில் நீங்கள் எழுந்து வருவீர்கள்” எனக் கூறியிருக்கிறார். இந்த வாழ்த்து அழகிரியை நெகிழ வைத்ததோட மட்டுமில்ல, ரொம்பவே கான்பிடன்ஸை கொடுத்திருக்காம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி திமுகவுல இருந்து ஓரம் கட்டப்பட்டாலும், மதுரையில தனக்கான செல்வாக்கோடத் தான் இருக்கார். அழகிருக்கும் ரஜினிக்கும் நடுவே எப்போவுமே ஒரு ஸ்பெஷல் நட்பு உண்டு.

துரை தயாநிதியின் திருமணத்துக்கு மதுரைக்கே நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி. ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.