Alagiri decides to join BJP, super reason ready

பாஜகவில் சேரப்போகும் அழகிரி, பலே காரணம் ரெடி

பாஜக அல்லது ரஜினி கட்சியில் சேர்ந்து தன் தம்பியும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினுக்கு டஃப் கொடுப்பாருன்னு எதிர்ப்பார்க்கப்பட்ட மு க அழகிரி, பாஜகவுலயே சேருவது, அதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் சேருவதுன்னு முடிவு பண்ணிட்டாராம்.

அதுக்கு அடி போடும் விதமாத்தான் நேற்று பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம் ஜி ஆர் பெயர் வைக்கப்படும்னு அறிவித்தவுடன், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டவேண்டும் என மோடிக்கு அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கோரிக்கை சீக்கிரமாவே நிறைவேற்றப்படுமாம். அதைத் தொடர்ந்து அழகிரி பாஜகவில் ஐக்கியமாகும் படலம் இனிதே நடக்குமாம். அதற்கு பிறகு தான் அழகிரியோட ஆட்டத்தையும் பாஜகவோட திட்டத்தையும் திமுக பார்க்கப் போகுதுனு கிசுகிசுக்கிறாங்க.

தமிழ்நாட்டுக்கு நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம் ஜி ஆர். பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என மோடிக்கு அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம் ஜி ஆர் பெயரை சூட்டியதற்கு நன்றி.
இதேபோல், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, விருதுநகர் பட்டம்புதூரில் நடைபெற்ற தென்மண்டல மாநாட்டில் நேற்று பேசிய ஸ்டாலின், பாஜகவை கடுமையாகவே விமர்சித்தார். தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என சூளுரைத்தார்.

“அதிமுக ஆட்சிக்கும் பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த கூட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும். திமுக கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகும் வரலாறு மீண்டும் நடக்கப்போகிறது. காங்கிரசுடன் இந்திரா காந்தி காலம் முதல் கூட்டணி அமைத்து வரும் எங்களை சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லும் பிரதமர் மோடி வைத்திருக்கும் கூட்டணி என்ன விதமான கூட்டணி? எது சந்தர்ப்பவாத கூட்டணி?

ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று ஓபிஎஸ் கூறியது மிகப்பெரிய பொய், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட்டணி வைத்திருக்க மாட்டார்.

ஐந்து வருடம் எந்த வளர்ச்சியும் வரமுடியாத நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சியடையும் என்கிறார் ஓபிஎஸ். விலைவாசி குறைந்துள்ளது என்கிறார் இபிஎஸ், ஆனால் கியாஸ் உள்பட எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்துவிட்டது,” என்று ஆவேசமாக பேசினார்.