Ajith’s warning or order? Who is being targeted by ‘thala’?

போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில் அஜித்- வித்யா பாலன்-ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.

இதில், ரசிகர்கள் தல என்று போற்றும் அஜித் பேசும் ‘ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்திறீங்க’ என்ற வசனம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இது அஜித் தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள உத்த‌ரவு என்றும், இனிமேல் அவர்களில் யாராவது மற்ற நடிகர்களை கீழ்த்தரமாக பேசி, அவர்களின் ரசிகர்களுடன் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ தகராறில் ஈடுபட்டால் தல சும்மா இருக்க மாட்டார் என்கிறார்கள்.

மேலும் சிலரோ, இது தன்னை இழிவுபடுத்தும் இதர நடிகர்களின் ரசிகர்களுக்கும் சேர்த்து தான் என்கின்றனர். எது எப்படியோ, ரசிகர்களுக்கு நடுவே உள்ள மோதல்கள் ஒரு முடிவுக்கு வந்தால் சரி.

இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, அஜித் அடுத்த படத்தில் கார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தையும் வினோத் இயக்க இருக்கிறார்.

இது, முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாகவும், கார் பந்தய வீரராக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில், அஜித்குமார் நடித்து இருக்கிறார். இது, அவருக்கு 59-வது படம். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது முதல் தமிழ் படம். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.