அதிரடி கிளப்ப போகும் அஜித், தாறுமாறுக்கு தயராகும் தல ரசிகர்கள்

ஒரு மாஸான காவல் அதிகாரி வேடத்தில் அஜித் இதுவரை நடிக்கவில்லையே என்ற தல ரசிகர்களின் குறை இனிமேல் போயே போச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து, அஜித் அடுத்ததாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோட்டு சூட்டு அணிந்து வக்கீல் வேடத்தில் அஜித் தனது தோற்றத்தை டிப் டாப்பாக காட்டியிருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜித். இந்த படத்தை இயக்கப் போவதும் வினோத் தான் இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக் கொண்டதை அடுத்து ஜிம்மிலேயே கிடந்து தனது உடல் எடையை நிறையவே குறைத்திருக்கிறார்.

அதற்கான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 90களில் பார்த்தது போல் தற்போது கனக்கச்சிதமாக உடல் தோற்றத்தை வடிவமைத்திருக்கும் அஜித் அந்த தோற்றத்துடன் வெளியிடங்களில் நடமாடத் தொடங்கியிருக்கிறார்.

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் நேர்கொண்ட பார்வையில், அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான தல60 படத்தையும், இயக்குனர் வினோத் இயக்க உள்ளார் என்றும், போனி கபூரே தயாரிக்க இருக்கிறார் என்றும் அண்மையில், தகவல் வெளியானது.

சமீபத்தில், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் மற்றும் பிற கதாபாத்திரங்களின் பெயர்கள் இவை தான் என சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலானது. அப்பதிவில் அஜித், நீதிதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் குணவதி தேவன் என்ற பெயரில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரங்கராஜ் பாண்டே தயாளன் என்ற பெயரிலும், ஷ்ரதா ஸ்ரீநாத் மீரா என்ற பெயரிலும், ஆதிக் ரவிச்சந்திரன் ஷிவ்ராஜ் என்ற பெயரிலும் நடித்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.