மறுபடியும் இணையும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ், அப்போ அது உண்மை தானா?

விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் நடுவில் ஒரு இது என ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்தாவது முறையாக இருவரும் ஜோடி சேர்ந்து வெறும் வாய்களுக்கு அவல் கொடுத்துள்ளனர்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தை வெளியிட்ட‌ கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அவரது ஜோடி. படத்துக்கு க/பெ ரணசிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் ஏற்கெனவே பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது ஐந்தாவது முறையாகவும் இணைந்துள்ளனர்.

கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில், மிக குறுகிய காலத்தில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி.

சம்பாதிக்கும் பணத்தை தானே வைத்து கொள்ளாமல், விவாசாயிகள் பிரச்சனை, மற்றும் பல்வேறு சமூக நலனுக்காக செலவு செய்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமில்லாது காயத்ரியுடனும் விஜய் சேதுபதி கிசுகிசுக்கப்படுகிறார்.

ஒரு படத்துல சேர்ந்து நடிச்சாலே, அந்த படத்தோட கதாநாயகனையும் நாயகியையும் இணைச்சு கிசுகிசு றெக்கை கட்டி பறக்கும் போது, ஒன்னு இல்லை, இரண்டு இல்லங்க, ஆறு படத்துல இணைஞ்சு நடிச்சிருக்கிற விஜய் சேதுபதியையும் காயத்ரியையும் லிங்க் பண்ணி பேசாம இருப்பாங்களா?

கோலிவுட் பூரா இப்படி ஒரு கிசுகிசு பரவி கிடந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலை படற மாதிரி இரண்டு பேரும் இல்லை போல. கடமையே கண்ணா இருவரும் இணைந்து நடிச்சு தள்ளிகிட்டே இருக்காங்க.

சமீபத்தில் வெளிவந்த‌ சூப்பர் டீலக்ஸ் படத்துலயும், விஜய் சேதுபதியும் காயத்ரியும் சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி காயத்ரி கிட்ட கேட்ட போது, அவர் கிட்ட இருந்து வந்த போல்டான பதில் இது தான்:

“அவர் செல்லும் இடங்களில் எல்லாம் என் நடிப்பை புகழ்ந்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே எனக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது.

ஷில்பா கதாபாத்திரம் (விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸில் நடித்துள்ள திருநங்கை வேடம்) எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் சேதுபதியை ஆண் தோற்றத்தில்கூட அந்த அளவுக்கு சைட் அடித்ததில்லை. ஷில்பாவை பயங்கரமாக சைட் அடித்தேன். டிரெய்லர் பார்த்தபோதுதான் அவரது உழைப்பு புரிந்தது.”

மேலும் அவர், “சூப்பர் டீலக்ஸ் டிரெய்லரில் அவரை பார்த்ததும் உங்களை பார்த்து பொறாமையாக இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகிறார்,” என்று விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளினார்.