AIADMK mouthpiece teases Rajini, Superstar gets ready for reply

ரஜினியை நோண்டிய அதிமுக நாளேடு, பதிலளிக்க தயராகும் சூப்பர் ஸ்டார்

சும்மா இருந்த ரஜினியை சொறிஞ்சி விட்டுடிச்சு ஆளும் அதிமுகவின் நாளேடு நமது அம்மா. இன்று வெளியாகியுள்ள ‘காலா ஓட்டு கழகத்துக்கே’ என்னும் கவிதை ரஜினி தரப்பை அதிர்ச்சியில ஆழ்த்தி இருக்காம்.

அந்த கவிதை தண்ணீருக்காக அதிமுக செய்தவற்றை எல்லாம் பட்டியலிட்டு, ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களின் ஆதரவு அதிமுகவுக்கே என்று மார்தட்டி இருக்கு. இதை தொடர்ந்து ரஜினி இதற்கு விளக்கமளிக்க தயராகிட்டு வர்றாராம். சும்மா இருந்திருதால் ஆவது ரஜினி ரசிகர்களில் பல பேர் நமக்கு ஓட்டு போட்டு இருப்பாங்க, இப்போ அதுவும் போச்சே என்றி சில அதிமுகவினரே புலம்புறாங்க.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது அமைப்பு போட்டியிடவில்லை என சில தினங்களுக்கு முன் ரஜினி அறிவித்தார். அந்த அறிவிப்பில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சில விசயங்களை கோடிட்டு காட்டி அவர்களுக்கு வாக்களியுங்கள் என தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தத் தேர்தலில் தமது ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் மன்றம் ஆகியவற்றின் பெயரையோ கொடியையோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்ய யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முக்கியமான பிரச்சனை தண்ணீர் பிரச்சனை என்றும் அதை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துபவர்கள் என்று யாரை நம்புகிறீர்களா அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாக ரஜினிகாந்த கூறியுள்ளார்.

ஏற்கனவே, தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் சொல்வது அதிமுகவுக்கு அவர் அளிக்கும் ஆதரவோ எனத் தோன்றுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.