After waiting for Simbu, Kuralarasan to marry soon

சிம்புவை ஓவர்டேக் செய்யும் குறளரசன், விரைவில் தம்பிக்கு டும் டும் டும்

அண்ணன் கல்யாணம் பண்ணிப்பாரு, நமக்கு ரூட் கிளியர் ஆகும்னு பல வருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்த குறளரசன், தன் உடன்பிறப்பு சிம்பு காதல் மட்டும் தான் பண்ணுவார், கல்யாணம் பண்ற ஐடியா இப்போதைக்கு இல்லைன்னு தெரிஞ்சதுக்கப்புறாம் தான் ஒரு முக்கிய முடிவெடுத்தாராம்.

அதாவது, ஒரு முஸ்லிம் பெண்ணுடன் காதலில் இருப்பதாக கூறப்படும் குறள், இனிமேலும் சிம்புக்காக காத்திருக்காம‌ தான் திருமணம் செஞ்சிக்க முடிவெடுத்ததோட மட்டுமில்லாம, இஸ்லாமுக்கும் மாற முடிவெடுத்தாராம்.

அதைத் தொடர்ந்து தான், பெற்றோர் டி ராஜேந்தர், உஷா ஆகியோர் ஆசியோட சமீபத்தில் இஸ்லாத்தை தழுவினாராம். ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்களும், இலக்கிய என்ற மகளும் உள்ளனர். இலக்கியா சமீபத்துல ஒரு கிறிஸ்தவரை மணந்தார்.

குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அது மட்டுமில்லாம, ஆல்பம், இந்தி படத்துக்கு இசையமைப்பதாகவும் சொல்லப்பட்டார்.

சமீபத்தில், குறளரசன் அவர்களது பெற்றோரான டி ராஜேந்தர் – உஷா முன்னிலையில் சென்னை அண்ணா சாலை தர்காவில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த டி ஆர், குறளரசன் இஸ்லாத்திற்கு மாறியதை உறுதி செய்தார். ‘ஆமாம், என் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். எங்களுக்கு எம்மதமும் சம்மதமே. அதனால் என் மகனின் முடிவை மதிக்கிறேன்’, என்றார்.