மே, 13க்கு பின் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறையும்

கொரோனா வைரஸ் தாக்கம், மே, 13க்கு பின், படிப்படியாக குறையும். இந்த வைரஸ், இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது’ என, வைத்தீஸ்வரன் கோவில் பிரபல நாடி ஜோதிடர் கணித்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஊரில், தையல்நாயகி அம்மாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.தனி சன்னிதிஇக்கோவிலில், நவக்கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வமுத்துக்குமார சுவாமி மற்றும் தன்வந்திரி சித்தர், தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளிஉள்ளனர்.

இக்கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்து உருண்டை மூலம், 4,448 வியாதிகள் குணமடைவ தாக கூறப்பட்டு வருகிறது. இத்தலத்தில் பார்க்கப்படும் நாடி ஜோதிடம், உலக பிரசித்தி பெற்றது. தேர்தல் கூட்டணி அமைப்பது, திருமணம், தொழில் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை, நாடி ஜோதிடம் மூலம் துல்லியமாக கணித்து சொல்வது, இங்குள்ள ஜோதிடர்களின் சிறப்பாகும்.

இதனால், நாள்தோறும் ஏராளமானோர் நாடி ஜோதிடம் பார்த்துச் செல்வர். கலியுகம்தற்போது, உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து, பிரபல நாடி ஜோதிடர் டாக்டர் சிவசாமி கணித்து கூறியதாவது:

கொரோனா வைரஸ் தாக்கம், கலியுகத்தில் ஏற்பட்ட மாற்றங்களாலும், கழிவுகளாலும் உருவானது.ஏப்ரல், 14 முதல் மே, 13 வரை, மேஷ ராசியில் சூரியன் வரும் காலகட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து, மே, 13க்கு பின், படிப்படியாக குறையும்.கொரோனா வைரசால், இந்தியாவிற்கு பெரும் ஆபத்து கிடையாது. இந்த ஆபத்தில் இருந்து காத்துக் கொள்ள, மக்கள், நாட்டையும், வீட்டையும், தங்களையும் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

_நன்றி : தினமலர்