ஹீரோரோவாக நடிக்கும் ஆதேஷ் பாலா

ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான்,சவரக்கத்தி, பேட்ட, உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆதேஷ் பாலா. இப்போது அந்தகன், பொன்னியின்செல்வன் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய திரையில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்தாலும் குறும்படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
தற்போது அவர் கதையின் நாய்கனாக நடித்திருக்கும் குறும்படம், ‘மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’. இதில் நாயகியாக ஹேமா  நடித்திருக்கிறார். காயத்ரி செந்தில்குமார்  இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில் இடம்பெறும் பாடல் இன்று மாலை வெளியாகவிருக்கிறது.
கண்மணி நீயே எனத் தொடங்கும் அப்பாடலுக்கு இசையமைத்து பாடியும் இருப்பவர் சார்லஸ் தனா. இவர் பேரழகி  உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர்.  ராம் கோபி எடிட்டிங் செய்துள்ளார். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தக்குறும்படத்தின் தலைப்பும் இதில் இடம்பெறவிருக்கும் பாடலும் குறும்பட வட்டாரங்களில் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. 
பாடல் வெளியானால் எல்லாத்தரப்பிலும் வரவேற்புப் பெறும் என்பது படக்குழுவின் நம்பிக்கை.