நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் பிரபல திரைப்பட நடிகை சுனைனா கூறியுள்ளார். திரைப்பட வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், நடிப்பு திறன் மிக்கவர் என்று பெயர் பெற்றார். 
இதனிடையே கடந்த ஆண்டு பொது முடக்கத்திற்கு  முன் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார். 
பொது முடக்கத்திற்கு பிறகு திரில்லர் வகையைச் சேர்ந்த டிரிப் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர், ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க பேச்சு நடத்தி வருகிறார். 
” கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா.
தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்துவர் இவை அனைத்தும் வந்ததிகளே என்றும்  திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது திரைப்படங்கள் பேச வேண்டும் என்றார்.