அட்ஜஸ்ட் செய்ய மறுக்கும் நடிகை, ஹீரோக்களுடன் நடிக்கவே தயங்குகிறாராம்

வசதியான சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்துள்ள கீர்த்தி சுரேஷ், மற்ற நடிகைகள் போல வளைந்து கொடுக்க மாட்டேன் என்கிறாராம். அதுவும், நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு, தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு மட்டுமே ஓகே சொல்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல், பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் தேவையில்லாதா விஷயங்களில் எல்லாம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதால், அந்த மாதிரி படங்களை தவிர்க்கிறாராம். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயக்குகிறார் என்கிறார்கள்.

ஆனால், கீர்த்தி தரப்போ இதையெல்லாம் மறுக்கிறது. ‘நல்ல வேடம், நல்ல டீம் இருந்தால் போதும், வேறு எதையும் கீர்த்தி பார்ப்பதில்லை. மேலும், அவர் போல டெடிகேடட் ஆர்டிஸ்டை பார்க்க முடியாது’, என்கிறார்கள்.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோவே இல்லையாம்.

கீர்த்தி சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன. இதற்கு காரணாம், கீர்த்தி சுரேஷின் தந்தையும் மலையாள சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் பாஜகவில் இருப்பதும், அவர், தனது மனைவியும் கீர்த்தியின் தாயாருமான‌ மேனகாவுடன் சமீபத்தில் தில்லியில் மோடியை சந்தித்ததுமே ஆகும்.

கீர்த்தி சுரேஷ் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து, மேனகா சுரேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்தார். தமிழில் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நடித்த மேனகா சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “என் கணவர் சுரேஷ் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். ஆனால் நான் இப்போதுவரை எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.

கீர்த்தியும் இந்த வி‌ஷயத்தில் என்னை மாதிரிதான். கணவர் சார்ந்திருக்கிற கட்சி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன்.

பிரசாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள். நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் இருந்ததால் நானும் கலந்துகொண்டேன்.

பா.ஜனதா அலுவலகத்திலேயே அந்த சந்திப்பு நடந்தது. குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த செய்திதான் நடிகை மேனகாவும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார் என்ற அர்த்தத்தில் வெளியாகி இருக்கிறது. கொஞ்சம் ஓவராக போய் ‘கீர்த்தியும் பா.ஜனதாவுல சேர்ந்துட்டாங்களாமே’ என்றுகூட விசாரித்திருக்கிறார்கள்.”