பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு பின்னணியில் நடிகை ஓவியா?

ஆசுவாசப்படுத்திக்கோங்க, உங்களை மாதிரி தான் நாங்களும் முதல்ல‌ ஷாக் ஆனோம். என்னனு தெரிஞ்சிக்க மேல படிங்க. 90 எம் எல் படத்தின் டிரைலர் ரிலீசானது முதலே கலாச்சார காவலர்களால் கண்டமேனிக்கு கலாய்க்கப்பட்ட ஓவியா மீது படம் வெளியான பிறகு போலிசில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இப்போது, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியான நிலையில, ஓவியாவையும் பொள்ளாச்சி சம்பவத்தையும் தொடர்புப்படுத்தி ஒரு புகார் அளிக்கப்பட்டு இருக்கு.

திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் கொடுத்துள்ள‌ புகாரில், “பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். முகநூல், டுவிட்டர் மூலமாக அவர்களுக்கு காதல் வலை வீசி திருமண ஆசை காட்டி அந்த பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் மனித இனத்திற்கே அவமானம்.

தமிழகத்தில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது அதைவிட கேவலம். கடந்த மார்ச் 1-ந் தேதி அனிதா உதீப் இயக்கிய 90 எம்.எல். படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை ஓவியா அருவருக்கத்தக்க வகையில் நடித்து இருந்தார்.

புகைப்பது, ஆண் நண்பருடன் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதான் பெண்ணியம் என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது. தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலும் 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்”, என்று கூறப்பட்டுள்ளது.

களவாணியில் அப்பாவி பெண்ணா மனங்களை கொள்ளை கொண்ட ஓவியா, பிக் பாஸில் போல்ட்னெஸ் காட்டி எல்லாரையும் கிளீன் போல்ட் ஆக்கினார். பிக் பாஸ் சகப்போட்டியாளர் ஆரவோட லிவிங் டுகெதரா வாழ்வதா கிசுகிசுக்கப்படும் ஓவியா, கல்யாணம் தனக்கு செட் ஆகாதுன்னு சமீபத்துல ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்து இருந்தார்.

“எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனா வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்று தெரியாது.

நான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண். தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல பொருந்தும் என்று தெரியவில்லை. தவிர எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று இப்போது வரை தோணவில்லை,” என்று தெரிவித்து இருந்தார்.