நடிகை ஆத்மிகா நடிகர் திரு.விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டுள்ளார்

நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக   எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். – நடிகை ஆத்மிகா