ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! !

Kantara Chapter 1 Trailer - Tamil | Rishab Shetty | Rukmini | Vijay Kiragandur | Hombale Films

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.

இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் படத்திற்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக டிரெய்லர் தற்போது வெளிவந்துவிட்டது.

இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை முன்னனி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்
தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை பகிர்ந்து…

ஒரு நாட்டுப்புறக் கதையும், நம்பிக்கையின் பேரொளியும் – தீவும் வேகமும் சங்கமிக்கும் அற்புதம்.

#KantaraChapter1 தமிழ் டிரைலரை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்

சினிமா ரசிகர்களுக்கு இயற்கையோடு இணைந்த தனித்துவமான அனுபவம்.

@shetty_rishab, @rukminitweets மற்றும் @hombalefilms குழுவிற்கு மிகப்பெரிய வெற்றிக்காக வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

டிரெய்லரில் திரைப்படம் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு விதமான மர்மம் மற்றும் சுவாரஸ்யமும் கலந்துள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் கதை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

காந்தாரா: சேப்டர் 1 ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும். இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்க்லன் ஆகியோரின் கலைநயமான திறமையில் திரைப்படத்தின் காட்சி மற்றும் உணர்ச்சி அனுபவம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

ஹொம்பாலே பிலிம்ஸ் முன்னெடுப்பில் 2022 படத்தின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் காந்தாரா: சேப்டர் 1-ல் ஒரு மிகப்பெரிய போர் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், 500க்கும் மேற்பட்ட திறமையான போர் கலைஞர்கள் மற்றும் 3,000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த காட்சி 25 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நகரில் 45–50 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாகும்.

இப்படம் அக்டோபர் 2 அன்று உலகளாவிய வெளியீடாக, கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் என, அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவரும் முயற்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

காந்தாரா: சேப்டர் 1 மூலம் ஹொம்பாலே பிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது, பாரம்பரியக் கதை, நம்பிக்கை மற்றும் கலைப்பூர்வமான அனுபவங்களை கொண்டுவரும் ஒரு ஆழமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கவுள்ளது.

Exit mobile version