நடிகர் சங்க தலைவர் நாசரின் வாழ்த்து கடிதம்

பெறுநர்,

மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள்,

பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், செய்தி, விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம், செய்தித்தாள் கட்டுப்பாடு மற்றும் செய்தித்துறை,

தலைமை செயலகம், சென்னை.

கடித எண்.745/தெ.ந.ச/2026 நாள் 18.05.2026

பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை, திரைப்பட தொழில்நுட்பம் உட்பட பல்வேறு முக்கிய துறைகளுக்கு அமைச்சராக தாங்கள் பொறுப்பேற்றிருப்பதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் மொழி, கல்வி, தமிழ் திரைத்துறை, விளம்பரம் மற்றும் ஊடகத் துறையின் சீரிய வளர்ச்சிக்கு தங்களது சிந்தனையும், ஆற்றலும் புதிய உயரங்களை வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மக்கள் நலனையும், தமிழரின் பண்பாட்டு மரபையும் முன்னிறுத்தும் வகையில் தங்களது பணிகள் சிறப்புடன் அமைய எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

பல்லாயிரம் தொழிலாளர்கள், கலைஞர்கள் உள்ளடக்கிய இத்துறை துரிதமான விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, கலைரீதியான வியாபாரரீதியான சவால்களை அவ்வப்போது சந்திக்கிறது…… தங்களின் மேலான ஆதரவோடு அவைகளை எதிர்கொள்வோம் என்றே நம்புகிறோம்.

ஏற்கனவே உலக அரங்கில் தடம்பதித்த தமிழ்ச்சினிமா இன்னும் அதிகமாய் பிரகாசிக்க, உன்னதமான திட்டங்களோடு தங்களை சந்திக்க விழையும்போது….. தங்கள் நேரத்தையும் மேலான ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டுகிறோம்.

தமிழ்க்கலை, பண்பாடு மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக தாங்கள் எங்க பக்கபலமாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்,

(M.நாசர்)

தலைவர்.

அமைச்சர் வாழ்த்துகள் கடிதம்

Exit mobile version