ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !!

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.

தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

Exit mobile version