“அண்ணாத்த” படத்தில் நடிக்கும் நடிகர் பாலா பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு  நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார்.

பிறகு நடிகர் பாலா பேசினார். அவர் கூறியதாவது:

தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இதற்கிடையில் என்னை மதித்து இந்த நிகழ்வுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. மீடியாவின் சக்தி அளப்பரியது. அந்த சக்தியுடன் என்னையும் இணைத்துக் கொண்டு மேலும் பல நல்ல செயல்கள் செய்ய காத்திருக்கிறேன். தொடர்ந்து பேசிய நடிகர் பாலா அடுத்து தன் அண்ணன் சிறுத்தை  சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  நடித்துக்கொண்டி ருக்கும் ‘அண்ணாத்த’ படம் குறித்து சில சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்த பாலாவை சங்க தலைவர் எஸ்.கவிதா, செயலாளர் எம்.பி.ஆப்ரகாம் லிங்கன், பொருளாளர் டி.ஜே. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று நினைவு பரிசு வழங்கி  கௌரவித்தனர்