நடிகர் ஆதி -இன் சமூக சேவை:
குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.
சமீபத்தில், அந்த குழந்தைகளில் அசாத்திய திறமை கொண்ட ஆறு வயது முதல் 9வயது வரை உள்ள 6 குழந்தைகளை தேர்வு செய்தார்கள். அவைகள் உடுத்த ஆசை படும் மிக உயர்ந்த ஆடை எது என்று கேட்கப்பட்டது. அவர்கள் விருப்பப்படி அந்த ஆடைகளை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு உடுத்தி அழகு பார்க்க பட்டது. அதை அப்படியே விட்டு விடாமல், சிறந்த ஒளிப்பதிவாளரை கொண்டு புகைப்படம் எடுக்கப் பட்டு அதை இந்த ஆண்டு காலண்டராக வடிவமைக்க பட்டு.. அந்த காலண்டரை அவர்களுக்கே பரிசாக நடிகர் ஆதி வழங்கினார். அதை பார்த்த குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அதன் பின் அந்த ஆடைகளையும் அவர்களுக்கே பரிசாக வழங்கப் பட்டது.
‘தி லிட்டில் பாக்டரி’
‘The little factory’ துவங்கியதன் நோக்கம் நல் இதயங்களின் மனதில் புன்னகையையும் அன்பையும் பரப்புவதே. தினமும் என்ணற்ற அழகான சிறு இதயங்களை நாங்கள் சந்தித்து வருகிறார்கள்.. இந்த முறை இது மிகவும் ப்ரத்யேகமானது, ஆடை கொடுத்து அவர்களின் கனவுகளை நறைவேற்றியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 6 அதி அற்புத திறமைகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.
அவர்களுடைய வாழ்வின் கதை அனைவரையும் பிரமிக்க வைக்கும், வாழ்வின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை நம் கண்களில் கண்ணீர் பூக்க செய்யும். இந்த நம்பிக்கை வர வழைப்பதற்க்கான நம்பிக்கையை பாடமாக அவர்கள் கொடுக்கிறார்கள்.
குடிசை பகுதி என்பது குப்பைக்கூழங்களை கொட்டும் வெற்றுக் குழிகள் அல்ல. புனிதமான மனிதத்தைக் காணக்கூடிய உண்மையான சொர்க்கம் அவை.
அவர்களது உணர்ச்சிமிக்க வார்த்தைகளும் ஒளிர்விடும் கண்களும் நாம் மதித்து கவனிக்கவேண்டியவை.
இந்த போட்டோஷூட் இந்த குழந்தைகளை பெரும் வெளிச்சத்திற்கு அழைத்து வரும் அற்புதமான வாய்ப்பு. கீழ்மட்டத்திலிருக்கும் இந்த குழந்தைகளை புகழ் வெளிச்சத்திற்குள் அழைத்து வருவது மகிழ்ச்சி. இவர்களுக்காக சிரத்தை எடுத்து இந்த ‘தி லிட்டில் பாக்டரி’ செயல்பட்டு வருகிறது.
இக்குழந்தைகள் நம்பிக்கையின் வடிவம் நம் தைரியத்திற்கான அடையாளம் .
இந்த முழு முயற்சியில் ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டர்கள் முடிந்தளவு இக்குழந்தைகளின் உலகத்தில் நமிக்கையின் ஒளியை பாய்ச்சி உள்ளார்கள். இதற்கு பக்க பலமாக நடிகர் ஆதி உள்ளார்.
ஏழை குழந்தைகளின் பிடித்த உயர்தர உடை உடுத்தும் கனவை நனவாக்கிய நடிகர் ஆதி. உடை உடுத்தி.. புகைப் படம் எடுத்து.. காலண்டராக கொடுத்தார்.வாழ்வின் மீதான நம்பிக்கையும் பாடமாக எடுக்கப்பட்டது.