இடிமுழக்கம் திரைப்படத்திற்கு அங்கிகாரம்

கலை கலைமகன் முபராக் தயாரிப்பில் சீனு ராமசாமி  இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்,காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படம் இடிமுழக்கம்,

இது வெளியீட்டுக்கு காத்திருக்கும் இவ்வேளையில் இனிப்பான செய்தி வந்துள்ளது,

மகாராஷ்டிராவில் 22வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் #இடிமுழக்கம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட்டது விழாக்குழு,

இந்திய சினிமாப் பிரிவில்  திரையிடப்பட்ட இடிமுழக்கம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது, இதனால்
இந்திய மீடியாக்களின் கவனம் படத்தின் மீது விழுந்ததுள்ளது.

நாயகன் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Exit mobile version