ஸ்டண்ட் இயக்குநர் மற்றும் நடிகர் ஆக விரும்புகிறவர்களுக்கு அரிய வாய்ப்பு!

தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குனர்கள் ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன், வடபழனி, சென்னை – 600 026

தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் யூனியன், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த யூனியனின் உறுப்பினராக இருப்பவர்கள் தென்னிந்திய மொழித்திரைப்படங்களில் மட்டும் இன்றி பாலிவுட் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழித் திரைப்படங்களிலும், வெளிநாட்டு திரைப்படங்களிலும் ஸ்டண்ட் இயக்குநர்களாகவும், ஸ்டண்ட் நடிகர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

தென்னிந்திய திரைப்பட & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் யூனியனில் உறுப்பினர்களாக, ஏற்கனவே யூனியனில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வந்த நிலையில், தற்போது உறுப்பினர்களின் இரத்தம் சொந்தம் அல்லாத வெளி நபர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை மற்றவர்களுக்கு கொடுக்கவும் யூனியன் முடிவு செய்துள்ளது.

 

தமிழகத்தில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேருவதற்கு நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் அடுத்த மாதம் அக்டோபர் 2023 ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பம் முதல் 21.09.2023 வழங்கப்படவுள்ளது.

  1. தகுதி: வயதுவரவு:18 முதல் 25 வரை 1.5.5 அடி உயரம் இருக்க வேண்டும்
  2. 10 ஆம் வகுப்புக்குமேல் படித்திருக்க வேண்டும்
  3. கார், பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
  4. நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வால் பயிற்சி, தனித்திறமைகள்

குறிப்பு: யூனியனில் சேர விரும்பும் நபர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் NOC பெற வேண்டும், அவர் பெயரில் எந்த ஒரு குற்ற செயலும் பதிவாகி இருக்க கூடாது.

V.மணிகண்டன் செயலாளர்

Share this:

Exit mobile version