கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான  காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக, இப்படத்தை இயக்குகிறார்.

இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன்  ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி, ஆகாஷ், நிதி ப்ரதீப், திவாகர், யுவராஜ், சுபாஷினி கண்ணன் , விஜே நிக்கி, கலைக்குமார், கிரி துவாரகேஷ், தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, மாதங்கி, கோவிந்தராஜ், விக்னேஷ், ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

ஒரு பாடலைத் தவிர, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு:
தயாரிப்பு நிறுவனம் – M R Motion Pictures
தயாரிப்பு – மகேஷ் செல்வராஜ்  
இயக்கம் – S. சாம்
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – சகிஷ்னா சேவியர்
எடிட்டிங் – A L ரமேஷ்
கலை இயக்கம் – M. தேவேந்திரன்
கதை – ராம்ஸ் முருகன்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – கலைக்குமார், ரகு தாப்பா
திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்  
பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர்
உடைகள் – நட்ராஜ்
உடை வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன்
ஸ்டில்ஸ் – மணியன்
தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு
விளம்பர வடிவமைப்பு – வியாக்கி
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

Share this:

Exit mobile version