*8 தோட்டாக்கள் ‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா*

ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும் இணைந்து தயாரிக்கும் ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்க
விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் 8 தோட்டாக்கள் புகழ் ‘வெற்றி’ கதாநாயகனாகவும்,  தெலுங்கில் பிரபலமான அக்ஷிதா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு மற்றும் பலர்  நடிக்க உள்ளனர்.

‘வெப்’ மற்றும் ‘7/ஜி’ படங்களை இயக்கிய ஹாரூன் இப்படத்தினை கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இசை – ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு – K V கிரண், கலை  – வேலு S, சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஹாரூன் கூறுகையில்;

இந்த படத்தில் 8 தோட்டாக்களுக்கு பிறகு வெற்றி காவல்துறை அதிகாரியாக  நடிக்க உள்ளார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறார். இவருக்கு நாயகியாக அக்ஷிதா நடிக்க உள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி, கோடாங்கி வடிவேலு ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின்   படப்பிடிப்பு கோயம்புத்தூர், ஏற்காடு, கொடைக்கானல், சேலம் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது.

இப்படத்தின் கதையை அதிக சஸ்பென்ஸ்களை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்பதை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறோம் என்றார்.

Captain MP Anand PRO

Share this:

Exit mobile version