“181” திரைப்படம் விமர்சனம்

சினிமா டைரக்டர் ஜெமினி வாய்ப்பு தேடி பட கம்பெனிகளில் கதையோடு அலைகிறார். ஒரு தயாரிப்பாளர் மூன்று நாட்களில் இன்னொரு புதிய கதையை எழுதிக்கொண்டு வரும்படி சொல்ல திரைக்கதை எழுதுவதற்காக காட்டுப்பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டுக்கு செல்கிறார். கூடவே தன் மனைவி ரீனா கிருஷ்ணனையும் அழைத்து போகிறார். அந்த பங்களாவில் போய் தங்கி கதை எழுத ஆரம்பிக்கிறார்.

அப்போது பங்களாவுக்குள்  அமானுஷ்ய சக்தி இருப்பதை இருவரும் தனித்தனியாக உணர்ந்து அச்சத்தில் உறைகிறார்கள். அமானுஷ்யசக்தி பங்களாவுக்குள் ஏன் நடமாடுகிறது என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த அதிர்ச்சி பின்னணி என்ன, அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன என்பது தான் 181 திரைப்படம்.

கதாநாயகனாக வரும் ஜெமினி, இயக்குநருக்கான கதாபாத்திரம் அறிந்து மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகியாக வரும் ரீனா கிருஷ்ணன் அழகில் கவனம் ஈர்க்கிறார்.

இறுதிக் காட்சியில் நடிப்பில் ஆவேசமும் காட்டி உள்ளார். உண்மை தெரிந்து இருவரும் எடுக்கும் முடிவு கதைக்கு வலிமை சேர்க்கிறது. விஜய் சந்துரு மற்றும் அவருடைய நண்பர்களாக வரும் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளனர். அபலைப் பெண்ணாக வரும் காவ்யா நடிப்பு கவனம் பெறுகிறது. அவரது முடிவு பரிதாபம்.

இசையமைப்பாளர் ஷமீல் திகில் கதைக்கு தேவையான பரபரப்பான இசையை கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரசாத்தின் கேமரா கோணங்கள் காட்டு பங்களா பேய் திகிலுக்கு உதவுகிறது. கிளைமாக்சில் இடம்பெற்றுள்ள வரம்பு மீறிய காட்சிகள் படத்தின் பலவீனம். வழக்கமான பேய் கதைக்குள் பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் சமூக விஷயங்களை வைத்து விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் இசாக்.

SAIRAJ FILM WORKS

“181”

தமிழ்சினிமாவில்எதைசெய்தாலும்புதிதாகஇருக்கவேண்டும்என்பதைகருத்தில்கொண்டுசெயல்படும்இயக்குனர்களில்இசாக்க்கும்ஒருவர்.

2 மணி நேரம் 3 நிமிடம் 30 விநாடிகள் SINGLE SHOT -ல் ‘ அகடம்’  என்ற திரைப்படத்தை எடுத்து “கின்னஸ் உலக சாதனை” படைத்த இயக்குனர் “இசாக்” கடைசியாக பிக் பாஸ் புகழ் “ஆரி அர்ஜுனை” வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார், அதை தொடர்ந்து மீண்டும் புதிய முயற்சியாக 12 மணி நேரத்தில் திரைக்கதை ஒன்றை எழுதிபுதியமுகங்களைவைத்துஇயக்கியும் இருக்கிறார்.

181 இது முழுக்க முழுக்க திகில்படம் என்றாலும், சமீபத்தில் தமிழக மக்களின் மனதை உளுக்கியஉண்மைசம்பவத்தின் அடிப்படையில்  இத்திரைக்கதையை எழுதி 181 படத்தைஎடுத்திருக்கின்றோம் என்றார்.

மேலும் இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் இசாக் கூறுகையில் பல தடைகளைத்தாண்டி இப்படம் படமாக்கப்பட்டது எனவும் சென்சார்சான்றிதழுக்காக3 மாதபோராடிபிறகுமேல்முறையிட்டில் A சான்றிதழ் கிடைத்ததாகவும் படத்தை பார்த்த மேல்முறையிட்டு தலைவர் நடிகை கெளவ்தமி பாராட்டியாதாகும் இத்தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்தார் மேலும் டிசம்பர் 16ம்தேதி அன்று திரைக்கு வரும் 181 திரைப்படத்திற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.

இத்திரைப்படத்தை சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பாக பி. பி. எஸ். ஈச குகா தயாரிக்க புதுமுகங்கள்  ஜெமினி, ரீனா கிருஷ்ணன், காவியா,விஜய் சந்துரு மற்றும் பலர் நடித்துள்ளனர்,

இப்படத்தின்எழுத்து , இயக்கம் –இசாக், ஒளிப்பதிவு- பிரசாத், படத்தொகுப்பு S. –தேவராஜ், கலை -மணிமொழியான் ராமதுரை, சண்டை பயிற்சி -கோட்டி ,மக்கள் தொடர்பு – செல்வரகு மேலும் இலங்கையின் “தேசிய விருது”  பெற்ற இசை அமைப்பாளர் ஷமீல்.ஜே இசையமைத்திருக்கிறார்

 

Share this:

Exit mobile version