18 ரீல்ஸ் எஸ் பி சவுத்ரி ஏ ஒன் திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்

சந்தானம் நடிப்பில் ராஜ் நாராயணன் தயாரித்திருக்கும் ஏஒன் திரைப்படத்தை 18 ரீல்ஸ் எஸ் பி சவுத்ரி தமிழ்நாடு  திரையரங்கு உரிமையை பெற்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று முதல் இப்படத்தை வெளியிட்டுள்ளார் முழுக்க முழுக்க காமெடியை கொண்டே  இத்திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி  அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.18 ரீல்ஸ் எஸ் பி சவுத்ரி வெளியிடும் முதல் படம் இது, அடுத்ததாக  மீண்டும் சந்தானம் நடிப்பில் டக்கால்டி என்ற திரைப்படத்தை 18 ரீல்ஸ் எஸ் பி சவுத்ரி தயாரித்துள்ளார், இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது