13.09.2017ல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது

13.09.2017ல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நாளை 13.09.2017 புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெறுகிறது.

இந்த யாகத்தில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

1.வர வேண்டிய பணம் வந்து சேரவும். 2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் சூழ்நிலை அமைய வேண்டி. எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும். 3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும். 4. சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும். 5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லவும். 6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகவும். 7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.8.நமது கடுமையான கர்மவினைகள் தீரவும். 9.தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும். 10.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் , 11.வழக்கு வியாஜ்ஜியங்களில்வெற்றி பெறவும், 12.வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும்.13..வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், 14 செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் நாளை 13.09.2017 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சொர்ண பைரவருக்கும் மாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரை ஸ்ரீ காலபைரவருக்கும் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது .தொடர்ந்து அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.