விறுவிறு வாக்குப்பதிவு: மாற்றமா? முன்னேற்றமா?

காலை முதலே தமிழகமெங்கும் பொதுமக்கள் ஓட்டுச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாத இந்த விறுவிறு வாக்குப்பதிவால் ஒன்றை மட்டும் நன்றாக உணர முடிகிறது: மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.

த‌ங்களை, த‌ங்கள் உணர்வுகளை, நம்பிக்கைக்களை, நாட்டை மதிப்பவர்களுக்கே ஓட்டு என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. போலிகளையும், பிரிவினைவாதிகளையும், வளர்ச்சிக்கும் பாதுகாப்பும் எதிரானவர்களையும் தங்கள் ஓட்டு மூலம் ஓட விட மக்கள் தயராகியுள்ளனர்.

இன்னும் வாக்களிக்காமல் இருப்பவரா நீங்கள்? இன்று நடப்பது, நம் தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல். எத்தனை பணிகள் இருப்பினும், எவ்வளவு தொலைவில் இருப்பினும், எவ்வளவு வேலைகள் இருப்பினும் ஓட்டுச்சாவடிக்கு விரைந்து சென்று ஓட்டளியுங்கள்.

தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.

‘நான் ஒரு ஆள் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது…’ என. சிலர் கருதலாம். இவ்வாறு பலரும் கருதுவதால் தான் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைகிறது.

அவ்வாறு பதிவான குறைந்த சதவீத ஓட்டுகளில், அதிக ஓட்டு பெற்ற, நாட்டின் நலனுக்கு பொருத்தமற்ற நபர் வெற்றி பெற்றுவிடுகிறார். இந்த தேசத்தின் வளர்ச்சி தடைபடுவது கெட்டவர்களின் செயலால் மட்டுமல்ல… கடமையை சரிவர செய்ய தவறும் நல்லவர்களாலும்தான்! எனவே கட்டாயம் ஓட்டளியுங்கள்.
நாளை நமதே! ஜெய் ஹிந்த்!!