லக்ஷ்மி மேனனின் ‘அந்த’ வீடியோ: உண்மையா? பொய்யா?

மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை லக்ஷ்மி மேனன். கும்கி, கொம்பன், வேதாளம், மிருதன் என பெரிய படங்களில் நடித்தார், பெயரும் வாங்கினார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தற்போது பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் என்கிற படத்தில் நடித்து வரும் லக்ஷ்மி மேனன், சில வருடங்களுக்கு முன் தன்னை தொடர்பு படுத்தி வெளியான ஒரு ஆபாச வீடியோ பற்றி தற்போது மனம் திறந்துள்ளார்.

“ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர எனக்கு சில காலம் தேவைப்பட்டது.

அந்த சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமா இருக்கேன்.

அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும்போது தான் பிரச்சினை வரும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால், பிரேக், பிரச்சினைகள் எதையும் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். எப்போவும் சந்தோ‌ஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோ‌ஷமா வெச்சுக்கணும், அவ்வளவு தான்,” என்றார்.

யங் மங் சங் படத்தில் யமுனா என்ற கேரக்டரில் கிராமத்துப் பெண்ணாக வருகிறார், லக்ஷ்மி மேனன். அதைப் பற்றி கூறும் போது, “இதுவரை நடிக்காத கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிச்சது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இயக்குநர் எம் எஸ் அர்ஜூனுக்கு இது முதல் படம். கேரளாவுக்கு வந்து கதை சொன்னார். பிடிச்சிருந்துச்சு, உடனே ஓகே சொல்லிட்டேன்,” என்றார்.

நடனத்தின் மீதான தன்னுடைய காதலை பற்றி கூறும் போது, “டான்ஸ் எனக்கு உயிர்னுகூடச் சொல்லலாம். ஏன்னா, மூணு வயசுல இருந்து நான் டான்ஸ் கத்துக்கிட்டு இருக்கேன். கிடைச்சிருக்கிற இந்த பிரேக்ல குச்சுப்புடி டான்ஸுக்கு டிப்ளோமா படிச்சுக்கிட்டு இருக்கேன். கூடவே, சோஷியாலஜி டிகிரியைப் பிரைவேட்டா படிச்சுக்கிட்டிருக்கேன். ஏற்கெனவே பரத நாட்டியத்துக்கு கோர்ஸ் படிச்சேன். குச்சுப்புடி டான்ஸ்ல எனக்கு ரெண்டாவது கோர்ஸ்,” என்றார்.