ரூ. 39.95 லட்சம் மதிப்பில் 864 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

ளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் ஃப்ளை துபாய் எஃப்இசட்-447 விமானத்தில் துபாயிலிருந்து சென்னை வந்த 41 வயதான ஆண் பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதனை செய்தபோது, 940 கிராம் எடையிலான தங்கம்  அவரது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ. 39.95 லட்சம் மதிப்பில் (இந்திய சந்தை மதிப்பு) 864 கிராம் தங்கம் சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வெளியீட்டு அடையாள எண்: 1758285)