ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணன்.K இயக்கத்தில் குரு சோமசுந்தரம் – ரகுமான் நடிக்கும் “ கதாயுதம் “

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ரம்மி படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.Kஇயக்கும் அடுத்த படத்திற்கு கதாயுதம் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது.                                                                                      

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக   கவனிக்கப் பட்டவர் குருசோமசுந்தரம்.  துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும்கதாயுதம் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

வசனம்        –       மோநா.பழனிச்சாமி 

ஒளிப்பதிவு   –   ஞானம்                             

இசை          –            ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள்  – கபிலன், மோநா பழனிச்சாமி

எடிட்டிங்     –        சசிகுமார்.ஜி    

கலை  –  R. விஜயகுமார்                    

நடனம்        –        பிருந்தா, சிவராக் சங்கர் 

ஸ்டண்ட்  –  சக்திசரவணன்                                     

தயாரிப்பு மேற்பார்வை  –   S. ஆனந்த்ராஜ்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்  – பாலகிருஷ்ணன்.K                                            

ரம்மி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை இயக்குகிறார்.                                                                                                           

தயாரிப்பு  –  ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ.                                                                                          

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது… வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும் அப்படி கனவுகளோடு இருக்கிற  இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை,பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் பாலகிருஷ்ணன்.