முதலில் தம்பி, இப்போது மகத்: சீக்கிரமே கல்யாணம் செய்து கொள்ளப் போகும் சிம்பு

தன்னை சுற்றியுள்ள அனைவரும் திருமணத்திற்கு தயராகி விட்டதால், சிம்புவும் சீக்கிரம் சிங்கிள் மோடிலிருந்து குடும்ப மோடுக்குத் தாவுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனது தம்பி குறளரசன் திருமணம் ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திராவும் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ம‌கத், அஜித்தின் மங்காத்தா உட்பட‌ சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் பிக்பாஸ் 2 கலந்து கொண்டு ஒரு சில சர்ச்சைகளை சந்தித்தார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.

இதனால், மகத்துக்கும், அவருடன் ஏற்கனவே காதலில் இருந்த‌ பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

தற்போது, தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக மகத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

பிராச்சியின் முழு பெயர் பிராச்சி மிஸ்ரா என‌வும் இவர் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரின் மகள் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, ஏப்ரல் 29க்கு இன்னும் பத்து தினங்களே இருப்பதால் குறளரசனின் திருமண‌ ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது.

மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர் அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத். இவர்களின் திருமண வரவேற்பு, வரும் 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்காக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்து வர்றார் டி ராஜேந்தர். முஸ்லீம் மதத்துக்கு மாறியிருந்தாலும் குறளரசன் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லைன்னு இப்போதைக்குத் தகவல்.