மிக விரைவில் நடக்கவிருக்கும் நயன்தாரா‍ விக்னேஷ் சிவன் திருமணம்?

நடப்பதை எல்லாம் பார்த்தால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மிக விரைவில் நடக்கும் என்றே தெரிகிறது. சென்னை விஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இவர்கள் இருவரின் திருமணம் விரைவில் நடந்தேறும் என செய்தி வெளியிட்டு இருந்தது.

தற்போது, கோலிவுட் வட்டாரத்தில் பலமாக‌ கிசுகிசுக்கப்படும் தகவல் என்னவென்றால், இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும், இதைத் தொடர்ந்து ஜோதிடரையும் சந்தித்து நான்கைந்து தேதிகளை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில் ஒரு தேதியை உறுதி செய்து நயன்தாராவை விக்னேஷ் சிவன் மணம் முடிப்பார் என்று தெரிகிறது. திருமணத்திற்கு பிறகும் நயன் படங்கள்ல தொடர்ந்து நடித்து ரசிகர்களை குஷி படுத்துவாராம்.

நயன்தாரா திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை அவரது ரசிகர்கள் சமிபத்தில் கொண்டாடி மகிழ்ந்த‌னர். இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகை யார் என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் நயன்தாரா என பதில் கூறிவிடலாம்.

தொடக்க காலத்தில் எல்லா ஹீரோயின்களையும் போல, சராசரி கிளாமர் ரோல்களில் தான் நடித்து வந்தார் நயன்தாரா. அதுவும் பில்லா படத்தில் பிகினி உடையில் நயன்தாராவை பார்த்து, ஜொள்ளுவிடாத ஆட்களே இங்கில்லை எனக் கூறலாம். ஆனால் இன்று. நயன்தாராவுடன் ஒரு படமானாலும் நடித்துவிட வேண்டும் என்ற போட்டி தான் இங்கு நிகழ்கிறது.

மலையாளத்தில் கடந்த 2003ம் ஆண்டு ‘மனசினகரா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நயன், 2005ம் ஆண்டு சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார்.

ரஜினி, சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நயன் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, சர்ச்சைகளை சந்தித்தார். எனினும், தனது நடிப்பில் முழு கவனம் செலுத்தத் தொடங்கிய நயன், கோலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் ஒரு பக்கா சென்னை லோக்கல் பையன். அவரோட பேச்சும், நடவடிக்கைகளும் பிடிச்சு போய் தான் நயன் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டார்னு தகவல் அறிஞ்ச வட்டாரம் சொல்லுது. எங்கிருந்தாலும் வாழ்க!