மாணவிகளிடம் பேச பயந்த புதுமுக நடிகர் பிரபா

மாணவிகளிடம் பேச பயந்த புதுமுக நடிகர் பிரபா

கல்லூரி பெண்களை கண்டு பயந்த நடிகர்.

(15.02.2018) காலை ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வைபவ் 2018 நிகழ்ச்சியை திருட்டு V C D மற்றும் மதுரைமாவட்டம் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபா கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்த்தார்.

விழாவில் மகளிர் கூட்டத்தில் பேசிய அவர் பெண்கள் கல்லூரி என்றதும் கொஞ்சம் பயந்து, தயக்க பட்டுத்தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்த்தும் உங்களை கண்டு வியந்தேன். இங்குள்ள அனைவருமே அன்பை பொழிந்தார்கள். நீங்கள் ஆண்களை விட மிகுந்த திறமைசாலிகளாக உள்ளீர்கள். பெண்கள் தான் இந்த நாட்டையும் வீட்டையும் தாங்குபவர்கள். நீங்கள் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும். எதிர்த்து போராடும் குணத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இது உங்களின் வாழ்வில் முக்கியமான பருவம். இப்போது படிப்பில் கவனம் செலுத்துங்கள். தாய், தந்தையை ஆசிரியரை மதியுங்கள். உங்கள் வாழ்வு இப்போது உங்களின் கடின முயற்சியில் உள்ளது. எல்லோரும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.