போனி கபூர் வெளியிடும் ‘டைனோசர்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டர்!

ஸ்ரீதேவியின் மகள் வெளியிடும் ‘டைனோசர்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

தமிழ்ப் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் , ட்ரெய்லர்,  மோஷன் போஸ்டர் போன்றவற்றை தமிழ்த் திரையுலகின் நட்சத்திரங்கள்  வெளியிடுவதுதான் இதுவரையிலான வழக்கம். ஆனால் ஒரு தமிழ்ப்படத்தின் மோஷன் போஸ்டரை இந்திய சினிமாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நட்சத்திரம் ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வெளியிடுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும். அந்தப் படம்தான் ‘டைனோசர்ஸ்’.
இப்படத்தை புதுமுக இயக்குநர் M R.மாதவன் இயக்குகிறார்.
இவர் இயக்குநர் சுராஜின் உதவி இயக்குநர், மேலும் பல இயக்குநர்களிடம் கதை விவாதங்களில், திரைக்கதை அமைப்பில் கலந்து திரை அனுபவம் பெற்றவர்.அவர் இயக்கியுள்ள படம்தான் இந்த ‘டைனோசர்ஸ்’. இது ஒரு கேங்ஸ்டர் கதை. 
இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள்தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ‘டைனோசர்ஸ்’ என்று  ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள். படத்தின்  கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவை.
இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல  சினிமா தயாரிப்பாளர்கள் பத்து பேரும்  முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கிறார்கள். இப்படி இப் படத்தில் 130 பேர் வசனங்கள் பேசி நடித்து இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் புதுமையான சித்தரிப்பின் மூலம்  மனதில் நிற்கும் படியான பாத்திரங்களாக அமைத்துள்ளார் இயக்குநர் M R.மாதவன்.
இப்படத்தை கேலக்ஸி பிக்சர்ஸ் (Galaxy Pictures) சீனிவாஸ் சம்பந்தம்  மற்றும் ஆக்டோ ஸ்பைடர் புரோடக்சன்ஸ் ( Octo Sider Productions)   எஸ்.துரை, இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கான விளம்பரங்களை  பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று சிந்தித்தபோது இந்தியாவில் பிரபலமான ஒருவரை நாடுவது என்று போனி கபூரை நாடி இருக்கிறார்கள். படத்தை பற்றியும் குழுவினர் பற்றியும் அறிந்து கொண்டு அவர் மோஷன் போஸ்டரை வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறார்.அதுமட்டுமல்ல அவரது மகள் ஜான்வி கபூர் பர்ஸ்ட்லுக்கை அறிமுகம் செய்கிறார்.
முழுக்க முழுக்க புதுமுகங்கள்  ஆதிக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘டைனோசர்ஸ்’ படம்  பாலிவுட் பிரபலங்களின்  அறிமுகத்தின் மூலம்   புதிய உயரத்திற்குச் செல்லும் எனலாம்.
DINOSAURS – டைனோசர்ஸ் | Official Title Motion Poster   LINK