பிரபு , விஷால் , ஜெயம்ரவி கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு!

பிரபு , விஷால் , ஜெயம்ரவி கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு!

பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு !

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்தமாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது. இது குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி,ஐ,டி பல்கலைகழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் கூறியதாவது ,

லயோலா கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்த கல்லூரியில் படித்த 50க்கும் மேற்பட்டவர்கள் சினிமா துறையில் நடிகர்களாகவும் , டைரக்டர்களாகவும் , ஊடகதுறையிலும் உள்ளனர். அவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்படுகிறார்கள். நடிகர் ஜெயம்ரவி விஷால் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள். 2-வது நாள் நிகழ்ச்சி அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள்.

லயோலா கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ச.லாசர் அடிகளார் , முதல்வர் ம. ஆரோக்கியசாமி அடிகளார் ,முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குநர் தாமஸ் அடிகளார் ஆகியோர் கூறியதாவது , கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தவுள்ளோம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் , மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம் , கல்லூரியின் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் லயோலா கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. சமூக பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.