பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’

சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படம் திரைக்குவர தயார் நிலையில் உள்ளது.

கதைசுருக்கம் : பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ‘நரிவேட்டை’ என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரில் முக்கிய நான்கு பேரால் ஒரு பெண் கொடுக்கப்படுகிறார். அந்த பெண்ணின் நிலைமை என்ன, அந்த நான்கு பேர் என்ன ஆனார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

இது ஆதாரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஆகாஷ் சுதாகர்.

இப்படத்தின் புதுமுக கதாநாயகனாக ஆகாஷ் சுதாகர் அறிமுகம். இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் மகாலட்சுமி அறிமுகமாகிறார்.இவர்களுடன் நெல்லை சிவா, போன்டா மணி, கிங்காங், கிளிமூக்கு ராமசந்திரன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை அதன் சுற்றுபுறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் நான்கு பாடல்களை இசையமைப்பாளர் சார்லஸ் தனா இசையமைக்கிறார். பாடல்களை கவிதா, ஜானகி ஐயர், மாணிக்க விநாயகம், மற்றும் அஸ்வின் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : ஆகாஷ் சுதாகர் / ஒளிப்பதிவு : சரவணன் /இசை : சார்லஸ் தனா /

பாடல்கள் : ஆகாஷ் சுதாகர் / படத்தொகுப்பு : C.கணேஷ்குமார் / மக்கள் தொடர்பு: செல்வரகு