நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு

நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு விழா

பிரபல பல் மருத்துவ நிபுணர் எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய புதல்வி டாக்டர்.பத்மா பிரீத்தா – டாக்டர்.கிறிஸ் ஜோசப் அவர்களுடைய திருமணம் மற்றும் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் கலந்துகொண்டு திருமண வரவேற்பு விழாவை இனிதே தொடங்கி வைத்தனர். மற்றும் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் பாக்யராஜ், பாண்டியராஜன் மற்றும் சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் பங்கேற்றனர்.

விழாவில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, திமுகவில் கனிமொழி, அதிமுகவில் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர்கள், தயாநிதி மாறன், துரைமுருகன், ஜகத்ராட்சகன், சபாநாயகர் தனபால், அமைச்சர் விஜய பாஸ்கர், ஏ.சி.எஸ்.சண்முகம், எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து, பா.ம.க. தலைவர் டாக்டர்.ராமதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.