நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி 20.12.2018

நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி 20.12.2018

தேதி : 20.12.2018

பத்திரிகை செய்தி

தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும் கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அச்சங்கத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும்.

எதிர்காலத்தை கணக்கில் வைத்து திரையுலகம் சீராய் இயங்குவதற்கும் மற்ற சங்கங்களுக்கு முன் உதாரணமாய் விளங்கும்படி ஒரு சூழலையும் முடிவையும் mm தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.