திரைப்படம் எடுப்பதில் ஒரு புது வழி - காட்சிப்படம்

திரைப்படம் எடுப்பதில் ஒரு புது வழி – காட்சிப்படம்

சினிமா என்கிற கனவுத் தொழிற்சாலை ஒவ்வொரு கால கட்டத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள தவறுவதில்லை. ஓர் இயக்குனரின் எண்ணத்தில் உயிர் பெரும் ஒரு கதை , பின் திரைக்கதை வடிவம் பெற்று , ஒரு தயாரிப்பாளரின் அடைக்களம் பெற்று, நடிகர்களின் அசாத்திய நடிப்பினாலும் தொழில்நுட்ப கலைஞர்க ளின் உழைப்பினாலும் மெருகேற்றப்பட்டு ஒரு ரசிகனின் பார்வைக்கு விருந்தாகின்றது. காகிதத்தில் உறங்கி கிடைக்கும் ஒரு கதை, திரைவடிவம் பெறுவதே ஒரு இயக்குனரின் அடங்காத கனவாக இருக்கும். இதை சாத்தியமாக்க ஒரு இயக்குனருக்கும் அவரது குழுவிற்கும் பல வழிகள் உள்ளன.அப்படி ஒரு வழிதான் – காட்சிப்படம்.

காட்சிப்படம் என்றால் என்ன ? ஒரு முழு நீள திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியையோ அல்லது சில காட்சிகளையோ டிஜிட்டல் வடிவத்தில், சிறிய budgetல் எடுப்பதே காட்சிப்படம் ஆகும்.இப்படி எடுக்கப்படும் இந்த காட்சிப்படமானது கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரி காசு கொடுத்து படம் பார்க்கும் ஒரு ரசிகனுக்கும் சரி அந்த படத்தை பற்றிய ஒரு எண்ணத்தையும் உணர்வையும் தருகிறது. அப்படி எடுக்கப்பட்ட ஒரு காட்சிப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஒரு தயாரிப்பாளர் தன் முடிவை எடுக்கலாம். காற்றில் முழம் போடாமல். கண்ணெதிரே எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதால் லாபத்துக்கான வாய்ப்புகள் என்றுமே சிறப்பாக இருக்கும். மேலும் ஒரு ரசிகனுக்கும் தான் பார்க்க போகிற படத்தின் மீதான எதிர்பார்ப்பு சிறப்பாகவும் சரியாகவும் இருக்கும்.

காட்சிப்படம் எடுத்தல் குறும்படம் எடுப்பதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? ஆம் இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு குறும்படம் என்பது அதை எடுத்தவர்களின், நடித்தவர்களின் திறமையை எடுத்துக்காட்டும். ஆனால் காட்சிப்படமானது ஒரு படி தாண்டி தான் எடுக்கப் போகும் கதையின் பலத்தை ஒரு தயாரிப்பாளருக்கு எடுத்துக்காட்டும்.

எனவெ…. இவை அனைத்தையும் மனதில் வைத்து இளைஞர் குழு ஒன்று ஒரு 25 நிமிட காட்சிப்படத்தை எடுத்துள்ளது.. அந்த காட்சிப்படத்தின் பெயர் “லேகா”.

“பீச்சாங்கை” புகழ் கார்த்திக் மற்றும்

“தெறி” புகழ் சாய் தீணாவும் தங்கள் ஒத்துழைப்பை கொடுத்து இந்த படத்தில் நடித்துக் கொடுத்துள்ளனர். முக்கியமாக இந்த திரைப்படத்திற்கான கதை ஒற்றை பாணியில் இல்லாமல் பல பாணிகளின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. மர்மம், திகில்,கற்பனை, காதல், சிரிப்பு, சண்டை என்ற பல பாணிகளின் சரியான கலவையாக படத்தின் கதை பயணிக்கும். இப்படிப்பட்ட கதையின் ஒரு சில காட்சிகள் மட்டும் இந்த காட்சிப்படத்தில் இடம்பெறும். எனவே ரசிகர்களின் ஏகோபித்த ரசனையை வெல்லும் படமாக இந்த காட்சிப்படம் அமைய வாய்ப்புள்ளது. மேலும் இனிமையான செய்தி என்னவென்றால் இந்த காட்சிப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வலைத்தளத்தில் வெளியாக இருக்கிறது.